டாஸ்மாக் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்கள்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!!

Photo of author

By Gayathri

டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக டாஸ்மார்க் ஊழியர் மற்றும் மது பிரியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அனைத்து மது பிரியர்களையும் கொந்தளிக்க செய்வதாக அமைந்தது.

இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை தடுக்க அரசு முடிவு செய்தது. இதன் மூலம் டாஸ்மார்க் கடைகளில் வாங்க கூடிய மது பாட்டில்களுக்கு ஸ்கேனர் மூலம் பணம் செலுத்துதல் மற்றும் மது பாட்டில்களில் க்யூ ஆர் கோட் போன்ற அம்சங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மேலும் இதன் மூலம் கூடுதல் விலை வைத்து மது பாட்டிலை விற்க முடியாது என அரசு நினைத்த நிலையில் அது தவறானது என்று மீண்டும் மீண்டும் டாஸ்மார்க் ஊழியர்கள் நிரூபித்துக் கொண்டே உள்ளனர்.

இதனை முற்றிலுமாக தவிர்க்க, தமிழக அரசு தவறு செய்யும் டாஸ்மார்க் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் qr கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மது பாட்டிலுக்கு நிர்ணிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பீல் கொடுக்கப்பட்ட பிறகும், கூடுதல் விலைக்கு டாஸ்மார்க் மது விற்பதாக புகார்கள் எழுந்திருந்தது.‌ ஒரு சில கடைகளில் புதிய மதுபானம், விற்கும்போது கூட பில் கொடுக்காமல் இருந்ததாகவும் வீடியோக்கள் வெளியாகிறது. இந்தநிலையில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பில் கொடுக்கப்பட்டும் கூடுதல் விலைக்கு, மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.