மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மே 7ம் தேதியிலிருந்து மதுக்கடைகள் திறப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்க்கு உயர்நீதி மன்றம் தடை விதிக்க, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.
அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திற்கபட்டன.
அதிக அளவிலான கொரோனா பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 76 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 147 மதுபானக் கடைகள் உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 14 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது
முக கவசம் மற்றும் குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரவை மீறி மது வாங்க வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.