மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினாலோ, தெருவில் சுற்றினாலோ அபராதம் – காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு!

0
66

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து முக கவசம் அணிந்து வெளியே சென்று வந்தனர்.

தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர், கொரோனா தீவிரத்தை உணராத மக்கள் முக கவசத்தை அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.
குறிப்பாக வாகன ஓட்டிகள் பலர் இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் சுற்றி திரிந்து வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் படி முககவசம் அணியாமல் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முககவசம் அணியாமல் சென்றால் 500 ரூபாயும், நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக் கூடாது எனவும் தேவையில்லாமல் வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் , நடந்து வந்தால் 100 ரூபாய் அபராதமாக இன்று முதல் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது மக்களிடம் கேட்டு கொண்டார்.

author avatar
Parthipan K