சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ரயிலடி தெருவில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியதாவது :-
ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மார்க்கை சுற்றி மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி போன்றவை செயல் பட்டு வருவதாகவும் இந்த டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் என அனைவரையும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்காகத்தான் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உட்பட 200 பேர் இணைந்து இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலளிக்கவில்லை என்றால் அடுத்த முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பொழுது அரசு செவி சாய்க்கவில்லை என்றால் குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பார்த்திபன் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி குழந்தைகள் தங்களுடைய சீருடைகளுடன் கலந்து கொண்டது அந்த பகுதியை பரபரப்பாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.