ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
அந்த பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் அனைவரும் இன்று அவரவர்களின் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க நேற்று முதல் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் தான்.அந்தவகையில் ஜல்லிகட்டுக்கு புகழ்பெற்ற இடமாக இருபது மதுரை ,அலங்காநல்லூர் ,பாலமேடு ,அவனியாபுரம்.இங்கு ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் ஜனவரி 15,16 மற்றும் ஜனவரி 17 ஆகிய மூன்று நாட்களில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.