தமிழகத்தை பொறுத்தவரை 4000 அரசு மதுபான கடைகள் நடத்தப்பட்ட வருகிறது. இந்த மதுபான கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது சட்ட ஒழுங்கு விதி மீறல்கள் நடைபெறக்கூடிய இடங்கள் மற்றும் நாட்களிலும் டாஸ்மார்க் கடைகள் மூடப்படுவது வழக்கமான ஒன்று. தமிழகத்திற்கு அதிக அளவு வருவாயிட்டி தரக்கூடிய துறையாக இந்த டாஸ்மார்க் துறை விளங்கி வருகிறது.
காரணம் சாதாரண நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் வீதமும், ஏதேனும் பண்டிகை காலங்களில் 150 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டக்கூடிய துறையாக டாஸ்மார்க் விளங்குகிறது.
மேலும் இலாபத்தை ஈட்டவும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிரமங்களை குறைக்கும் வகையிலும் டாஸ்மார்க் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பல்வேறு புதிய நடைமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், அனைத்து நாட்களிலும் டாஸ்மார்க் கடைகளை செயல்படுத்துவது என்பது கடினமான சூழல் என்பதால் சில முக்கிய தினங்கள் விடுமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி ஆண்டிற்கு குறிப்பிட்ட வழங்கப்படும் 8 விடுமுறை தினங்கள் பின்வருமாறு :-
✓ திருவள்ளுவர் தினம்
✓ குடியரசு தினம்
✓ மகாவீர் ஜெயந்தி
✓ வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்
✓ மே தினம்
✓ சுதந்திர தினம்
✓ நபிகள் நாயகம் பிறந்த நாள்
✓ காந்தி ஜெயந்தி
ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மார்க் கடைகளுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.