இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

இடுப்பு வலி மற்றும் மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல.. பிரண்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

Divya

உங்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு சிறந்த தீர்வாக பிரண்டை எண்ணெய் திகழ்கிறது.பிரண்டை மற்றும் தேங்காய் எண்ணையை வைத்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பிரண்டை எண்ணெய் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை – ஒரு கப்
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் பிரண்டை துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிரண்டை நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இந்த எண்ணையை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடித்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணைய் மூட்டு வலி முதல் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் மருந்தாக திகழ்கிறது.

பிரண்டை எண்ணெய் நன்மைகள்:-

1)மூட்டுகளில் வலி உள்ள இடத்தில் இந்த பிரண்டை எண்ணையை அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

2)எலும்பு முறிவு,எலும்பில் காயம் இருந்தால் இந்த பிரண்டை எண்ணெய் அப்ளை செய்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

3)தினமும் சில துளிகள் பிரண்டை எண்ணையை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் குடித்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

4)இடுப்பு வலி பிரச்சனை இருப்பவர்கள் பிரண்டை எண்ணையை அவ்விடத்தில் ஊற்றி தடவலாம்.

5)உடல் வலி இருந்தால் பிரண்டை எண்ணையை கொண்டு மசாஜ் செய்யுங்கள்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.