தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்!! டிக்கெட் புக் செய்வதற்கு முன் இதை கவனியுங்கள்!!

0
12
Tatkal train ticket booking time changed!! Keep this in mind before booking a ticket!!
Tatkal train ticket booking time changed!! Keep this in mind before booking a ticket!!

இந்தியாவில் இருக்கக்கூடிய பல அர்த்தங்கள் உடைய அன்றாட போக்குவரத்திற்கு ரயில்களையே சார்ந்து இருக்கின்றனர். இதன் பெரும்பாலானோர் தங்களுடைய ரயில் பயணத்திற்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இந்த நிலையில் IRCTC ஆனது தட்கலில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது.

மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு நேரங்கள் பின்வருமாறு :-

✓ AC வகுப்பு (1A, 2A, 3A, CC): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய நேரம் காலை 11:00 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Non-AC வகுப்பு (SL, 2S): முந்தைய நேரம் காலை 11:00 மணி. புதிய நேரம் மதியம் 12:00 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Premium Tatkal (PT): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய நேரம் காலை 10:30 மணி என மாற்றப்பட்டு இருக்கிறது.

✓ Current Reservation: புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
முகவர்கள் முன்பதிவு செய்ய வழங்கப்பட்ட வந்த அனுமதி தற்பொழுது இல்லை. இவற்றிற்கான காலநேரம் காலை 10 AM முதல் 12 PM வரை.

✓ IRCTC இணையதளத்தில் அதிகப்படியான பயன்பாடு: முன்பு மிதமாக இருந்தது. இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தகவல் :-

புதிய நேர அமைப்பு நேரடி பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கிறது. மேலும், முதல் இரண்டு மணி நேரத்தில் பயண முகவர்கள் முன்பதிவு செய்வதைத் தடுப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்டவை அனைத்தும் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்ட முன்பதிவு நேரங்கள் ஆகும். தட்கலில் டிக்கெட் புக் செய்து பயணிக்க நினைக்கக் கூடியவர்கள் இனி மாற்றப்பட்ட காலங்களை அறிந்து அதற்கேற்றவாறு முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleதொட்டுப்பார் சீண்டிப்பார் வீடியோ போடுங்க!. செம காமெடியா இருக்கும்!.. ஸ்டாலினை கலாய்க்கும் பழனிச்சாமி!..
Next articleஅறிவிக்கப்பட்ட தள்ளுபடி!! மகிழ்ச்சியில் நகைக் கடன்.. பயிர் கடன் பெற்றவர்கள்!!