ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

0
224

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் உங்கள் ராசியிலேயே இருப்பதால் அனுகூலம் இருந்தாலும் அலைச்சல்களும் இருக்கத்தான் செய்யும். நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவியிடையே அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அலைச்சல்கள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் கவனமாக இருப்பது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here