விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகரும் இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு!! இவருக்கு என்ன செய்ய காத்து இருக்காங்களோ தெரியல!!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் பற்றிய தகவல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. அது என்னவென்றால் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு அளிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த வழக்கு சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தின் விசாரணையின் பொழுது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது என்றும், சமுதாய கடமையாற்றும் நீங்களே இப்படி வரிவிலக்கு கேட்டு நின்றால் உங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு எப்படி வரி கட்டும் எண்ணம் வரும் என்று நீதிபதி அவருக்கு நோஸ் கட் செய்துவிட்டார். மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதி திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் தொகை கட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது. மேலும் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். பல சமூக ஆர்வலர்கள் விஜயின் இந்த செயலினால் அவர் மீது சில விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது விஜய் போலவே நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் வாங்கியுள்ளார். மேலும் அவர் வாங்கிய காருக்கு நுழைவு வரியாக 60.66 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வணிய வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2015 இல் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.