மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் கதையானது மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் குறித்து 2024 மே மாதத்தில் இந்தியா கிளிட்ஸுக்கு நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
நாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலா அது வானத்து மேல என்ற பாடலில் வரும் பலானது ஓடத்து மேல என்ற வரியானது யாருக்கும் பிடிக்காத நிலையில், இளையராஜா தான் ரொம்ப ஃபீல் பண்ணி, அதை வைக்கணும்னு சொன்னாராம். அது மெட்ராஸ் ஸ்லாங். அந்தப் பாட்டை நான் எங்கே போனாலும் பாடச் சொல்லி கேட்பாங்க. அது மலேசியா போனப் பொழுதும் எனக்கு நடந்தது என தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த பாடல் படப்பிடிப்பின் பொழுது நடந்த சுவாரசியமான தகவல்களையும் பகிர்கிறார். அதில், கொச்சின் கழிமுகத்தில் வைச்சு நிலா அது வானத்து மேல் பாட்டு எடுத்தார்கள்.இரண்டு ஷாட் எடுத்து முடிச்சதும் கடலுக்குள் சென்றதாகவும் , அடுத்து எல்லோருக்கும் வாந்தி வந்து விடவே பிறகு கொச்சின் கழிமுகத்தில் வைத்து பாட்டு முழுவதையும் எடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரஜினி மற்றும் கமலுடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். அவை பின்வருமாறு :-
ரஜினி அவர்களுக்கு கதை படித்து விட்டால் நடிக்க ஒத்துக் கொள்வார். படப்பிடிப்பு தளத்தில் தனக்கான காட்சிகள் முடிந்தவுடன் வேகமாக சென்று சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிடுவார் என்றும் தனக்கு ஒரு நாளைக்கு 10 சிகரெட் தேவைப்படுகிறது என்றால் அவருக்கு 25 லிருந்து 30 சிகரட்கள் தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கமல் குறித்து பேசுவையில், கமல் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரிக்கவே மாட்டார் என்று தெரிவித்ததோடு அங்கு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான தகவலையும் தெரிவித்திருக்கிறார்.
அது, திடீர்னு ஒரு நிரோத்தை எடுத்து வந்தார். சத்யா படத்தில் நீதான் நாயுடுயா என்று கூறினார். அப்போது எனக்கு நிறைய முடி இருக்கும். அதை சரிசெய்ய தலையில் நிரோத்தை எனக்கு மாட்டிவிட்டு, அடுத்து, தலையில் எனக்கு விக் வைத்துவிட்டார்கள். தெலுங்கு நடிகர்கள் எல்லாம் விக் வைத்து நடிக்கிறாங்க இல்லையா, அதைக் கிண்டல் செய்வதற்காக எனக்கு அப்படி கெட்டப் போட்டு விடுவார் என்றும் தெரிவித்தார்.