கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

0
111
Teacher eloped with college student! College administration shocked by affair!
Teacher eloped with college student! College administration shocked by affair!

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.

அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து வந்துள்ளார். தனிமை அவரை வாட்டி வதைத்துள்ளது. அந்த மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி அந்த மாணவன் லேப்பிற்கு வரும்போது சந்தித்து நட்பாக பழகியுள்ளனர்.

இந்த நட்பு சிறிது நாட்களில் காதலாக மாறியுள்ளது. பின்னர் அந்த கல்லூரி மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த மாணவர் நான் பெங்களூரு படிப்பு விசயத்திற்காக செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

பெங்களூரு சென்ற மாணவன் நீண்ட நாட்களாக தனது பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் பெற்றோரை புறக்கணித்து வந்துள்ளான்.

இதனால் மாணவனின் பெற்றோருக்கு மகனின் நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது. பின்னர் எங்களது மகன் பெங்களூரு படிப்பு விஷயமாக செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன் இதுவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவனின் செல் போன் எண்ணை ட்ராக் செய்தபோது அந்த மாணவர் லேப் டெக்னீசியன் பெண்ணுடன் 2 மாதங்களாக ஹோட்டலில் ரூம் எடுத்து கணவர் மனைவி போல வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று மாணவரை தனியே அழைத்து புத்திமதி சொல்லியுள்ளனர். அதேபோல அந்த பெண்ணுக்கும் புத்திமதி சொல்லி இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவனை கல்லூரி ஆசிரியை காதலித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்தை கதிகலங்க வைத்துள்ளது.

Previous articleநான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!
Next articleஅதிமுக வின் முக்கிய புள்ளியை தூக்க பார்க்கும் திமுக.. எடப்பாடியை நிற்கதியாக்க பலே திட்டம்!!