கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செட் உதவி பேராசிரியர் தேர்வானது தொழில்நுட்ப காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் தற்பொழுது அந்த தேர்வு நடத்துவதற்கான தேதிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த உதவி பேராசிரியர்காண செட் தேர்வானது வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக 6,7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வானது CBT முறையில் நடத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கு புதிதாக விண்ணப்பிக்கலாமா என கேள்விகள் எழுந்த நிலையில் ஆசிரியர்கள் தேர்வாணையமானது ஏற்கனவே இந்த தேர்விற்காக விண்ணப்பித்த 1 லட்சம் பேர் மட்டுமே இந்த தேர்வினை எழுத முடியும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வழங்கப்படும் என்றும் அதனை https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.