தமிழக அரசு ஆசிரியர்களுக்கு இலவச பரிசோதனை இந்த வருடம் முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் மருத்துவ ஆலோசனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக உடல் முழு பரிசோதனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கு தகுதி உடையவர்.
இதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த மாத 28ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதில் தேவை அதிகமாக உள்ள முதல் 150 ஆசிரியர்களை மாவட்ட வாரியம் தேர்வு செய்யும். இந்த பரிசோதனைக்காகவே தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து 57 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசின் சார்பில் நல்ல சம்பளம் வாங்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்களுக்கு எதற்காக இலவச பரிசோதனை எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இது வரவேற்கத்தக்க திட்டம் எனவும் கூறுகின்றனர்.