விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!
நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும்.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு மாணவனின் விடைத்தாள ஆசிரியர் ஒருவர் திருத்தும்போது ராமாயணம் தொடர்பான கேள்விக்கு அந்த மாணவனுக்கு விடை தெரியவில்லை போல. அதற்கு பதிலாக அந்த மாணவன் அதில் எழுதி இருந்ததாவது, “என் விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன்.
எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும். இல்லாவிட்டால் என் தாத்தாவிடம் சொல்லி பில்லி சூனியம் வைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்த அந்த ஆசிரியர் உடனடியாக அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு உயர் அதிகாரிகளிடம் சென்றுள்ளார். அவர்களும் இதைப்பார்த்து ஷாக்காகி உள்ளனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த மாணவர் அந்த விடைத்தாளில் 100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சில சமயங்களில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான். தற்போது இந்த தகவல் தான் ஆந்திராவில் டிரெண்டிங்கில் உள்ளது.