Breaking News

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

அந்த வீடியோவில் ஆசிரியர் தனது மாணவர் ஒருவரிடமிருந்து மசாஜ் பெறுவதைக் காணலாம். ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்மிளா சிங் என்ற அந்த பெண் ஆசிரியர் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சம்மந்தப்பட்ட அந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர் மசாஜ் செய்ய அந்த ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். வகுப்பறையில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் இது இது நடந்துள்ளது. இதையடுத்து தற்போது அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment