ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Photo of author

By Parthipan K

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Parthipan K

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்போதைய ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. நிரப்பப்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி பணி புரியும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.

எனவே 13 ஆயிரத்து 331 தற்காலிக பணியில் உள்ள ஆசிரியர்களின் பணியை வாபஸ் பெற்று,டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர பணிக்காக உத்தரவு விட வேண்டும் என்றும், சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினார்கள். மேலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் டிபிஐ வளாகத்தில் முன் மொட்டை அடித்தும் அரை நிர்வாண முறையில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

இதற்கிடையே பள்ளியின் மேலாண்மை குழுக்கள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதற்காக உரிய வழிமுறைகள் வெளியிடப்படும் வரை பணி நியமனம் வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தகுதி இல்லாதவர்களை பணி நியமனம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.