விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடிகர் செந்தில் அவர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.
இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக சோகத்துடன் வீடியோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியத்துடன் நீங்களுமா சிக்கிக் கொண்டீர்கள் என்பது போல மாறி இருக்கிறது.
இதுகுறித்து நடிகர் செந்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
தான் காரல் பயணம் சென்று கொண்டிருந்த பொழுது தனக்கு நெருங்கிய ஒருவர் வாட்ஸ் அப்பின் மூலமாக தன்னிடம் 15,000 ரூபாய் அவசர உதவியாக கேட்டதாகவும் உடனே அவர் குறிப்பிட்ட எண்ணிற்கு இந்த தொகையை அனுப்பி விட்டதாகவும் தெரிவித்த நடிகர் செந்தில் அவர்கள் அதன் பின்பு அவருக்கு அழைத்து பணம் வந்து விட்டதா என கேட்ட பொழுது தன்னுடைய whatsapp ஹேக் செய்து விட்டதாகவும் இதுபோல தனக்கு 500 பெயரிடமிருந்து அழைப்புகள் வந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்பு தான் தான் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகர் செந்தில் அவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் சென்று வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் அந்த வீடியோவில் பதிவிட்டு இருக்கிறார்.