நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!

Photo of author

By Kowsalya

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!

ஃபேஸ்புக் மூலமாக இளைஞரை காதல் செய்த இளம்பெண் ஒருவர் அந்த இளைஞரை ஏமாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார். 30 வயதான இவர் பிரின்டிங் பிரஸ் வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் இவருக்கு பேஸ்புக் மூலமாக நண்பராகிய உள்ளார்.

இருவரும் பேச ஆரம்பத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் காதலில் மூழ்கி உள்ளனர். 3 மாதமாக மாணவி பேசுவதை நிறுத்திவிட்டார்.

அதனால் அந்த இளைஞர் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார்.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த பெண்ணிடம் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்ததுள்ளது. அதில், ”நான் உன்னைதான் காதலிக்கிறேன்.. நீ இல்லாமல் நானில்லை. உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை” என உருகி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கடந்த 5ம் தேதி அந்த இளைஞருக்கு அந்த பெண் போன் செய்துள்ளார். உன்னை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் காதலியை பார்க்க அன்றே வினோத்குமார் ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள பைக்கில் திருச்சி வந்து உள்ளார்.

மதுரை ரோட்டில் உள்ள ராணுவ மைதானத்துக்கு வரும்படி அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால் வினோத்குமார் அங்கு சென்று காத்து கொண்டு இருந்துள்ளார்.

அங்கு ஒரு ஆட்டோவில் வந்த 4 பேர், அந்தப் பெண் அழைத்து வர சொன்னதாக கூறி அந்த இளைஞரை ஆட்டோவில் ஏற சொல்லி, பைக்கை 2 பேர் பின்னால் ஓட்டி வந்துள்ளனர். ஒரு வீட்டுக்கு அவரை அழைத்து சென்று பைக்கை பிடிங்கி வைத்துக்கொண்டு சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் ரூ.1லட்சம் தந்தால் பைக்கை தருவதாக அந்த இளைஞரை விரட்டி உள்ளனர்.

இதுபற்றி வினோத்குமார் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் ரகமத்நிஷா (20), மதுரைரோடு வள்ளுவர் நகரை சேரந்த ஆசிக் என்ற நிவாஷ் (26), பாலக்கரையை சேர்ந்த முகமதுயாசர் (22). வீடுகள் திருச்சியை சேர்ந்த காஜாமலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ரகமத்நிஷா ஒரு கல்லூரி மாணவி. இவர் அன்சாரி என்பவரை காதலித்து நிச்சயம் முடிந்துள்ளது.

காதலனுடன் சேர்ந்து வாலிபர்களிடம் பேஸ்புக் மூலம் பழகி பணம், பொருட்களை பறித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்கு அஜிஸ், சித்திக், அன்சாரிலால், உசேன் ஆகிய 4 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர் என தகவல் வெளியானது. மாணவி உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். காதலன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.