18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

Photo of author

By Kowsalya

18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

Kowsalya

பஞ்சாபின் லூதியானாவில் தனது சுற்றுப்புறத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது மகள் புதன்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் வந்து சிற்றுண்டி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தாய் தெரிவித்தார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

 

கடந்த இரண்டு மாதமாக குழந்தையுடன் நன்றாக பழகி இருந்தார்கள், வேண்டுமென்றே பழகி இருக்கிறார்கள் என குழந்தையின் தாய் தெரிவித்தார்.

 

சம்பவத்தை தொடர்ந்து, சிறுமியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு, குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளார்.

 

தாய் குழந்தையைத் தேடத் தொடங்கியபோது, ​​அவள் குழந்தை இரத்தப்போக்குடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

உயிர் பிழைத்த சிறுமி, தனது தாயார் முன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார், அதன் பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.