பிளஸ் ஒன் மாணவியால் வாலிபர் பலி! போலீசார் விசாரணை!

பிளஸ் ஒன் மாணவியால் வாலிபர் பலி! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி பழனியம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் அவர் மணிகண்டன் (27). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் அவருடைய அண்ணன் ரமேஷ் மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காலை வெகு நேரம் ஆகியும் எந்திரிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அவர் தூங்கிக் கொண்டிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர் அப்போது மணிகண்டன் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்தார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து மணிகண்டனின் அண்ணன் ரமேஷ் பள்ளப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் மணிகண்டன் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறு மாணவியின் தாய் கடந்த வாரம் போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் விசாரணைக்கு வருமாறு மணிகண்டனை செல்போனில் அழைத்தபோது மணிகண்டன் வெளியூரில் இருப்பதாகவும் கூறி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து மணிகண்டன் உறவினர்கள் போலீசார் விசாரணைக்கு அழைத்த காரணம் தான் மணி அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் தெரிவித்தனர்.

Leave a Comment