தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று காய்கறி விற்பனை செய்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், காய்கறிகளை வாங்குவதற்காக அங்குள்ள சந்தைக்கு சென்றார். அப்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு நேற்று சிகிச்சை பெற்ற பெண், மறுநாளே காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால், மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்து மருத்துவனை செல்லுமாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்காத அந்த பெண், அறிவுரை கூறிய மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காய்கறி சந்தையிலிருந்தும் அந்த பெண் வெளியேற மறுத்ததால், வேறு வழியின்றி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த பெண்ணை வெளியேற்றி, அறிவுரைகளைக் கூறிய வீட்டுத் தனிமையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.