இவனை மாடோடு மாடாக நிற்கச் சொல்.. நாசரைப் பார்த்து கடுப்பான இயக்குனர்!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமா துறையில் தேவர் மகன் எம்டன் மகன் மைக்கேல் மதன காமராஜன் நாயகன் என பெரிய அளவில் பாராட்டைப் பெற்ற படங்களில் தன்னுடைய முழு திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் அமர்ந்த நாசர் “ஆவாரம் பூ” திரைப்படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

ஆவாரம் பூ திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும் தான் நடித்தது குறித்தும் நடிகர் நாசர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

ஆவாரம் பூ திரைப்படத்தினுடைய தயாரிப்பாளருக்கு கே ஆர் அவர்கள் தான் பைனான்ஸ் செய்ததாகவும், அதன் காரணமாக தன்னை அத்திரைப்படத்திற்கு சுபாரிசு செய்ததாகவும் நாசர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் கே ஆர் அவர்கள் நடிகர் நாசரை அழைத்து நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போ என்றும் இயக்குனர் நீ நடிப்பதற்கு ஓகே சொன்னால் நடி இல்லை என்றால் அங்கிருந்து திரும்பி விடு என கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்திருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது எனவும் நாசர் கூறியுள்ளார்.

அதற்குக் காரணம் மலையாளத்தில் மிகப்பெரிய ஆளுமையை கொண்ட இயக்குனரான பரதன். இவர் தேவர் மகன் உட்பட தமிழில் பல படங்களை இயக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட இயக்குனர் பரதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஆவாரம் பூ. கே ஆர் அவர்கள் கூறியதை தொடர்ந்து அடுத்த நாள் நாசர் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று நாசர் அவர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கிறது என்று அப்பொழுது தெரியவில்லையாம்.

நாசரை பார்த்த இயக்குனர் பரதன் அவர்கள் அவருடைய உதவியாளரை அழைத்து ” இவனை யாருடா இங்கு வர சொன்னது ” என கோபமுடன் சத்தமிட்டு இருக்கிறார். உடனே உதவியாளரும் கே ஆர் அவர்கள் சிபாரிசு என்று கூறவே, யாருடைய சிபாரிசாக இருந்தால் என்ன நீ உடனடியாக பஸ் ஸ்டாண்ட் ஸ்டேஷன் என அனைத்து இடத்திற்கும் சென்று வாட்டசாட்டமான ஒருவனை அழைத்துவா என நாசர் இருக்கும் பொழுதே கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

என்ன செய்வது என்று புரியாமல் தான் நின்று கொண்டிருந்த பொழுது திடீரென இயக்குனர் பரதன் அவர்கள் எழுந்து வந்து தன்னுடைய தலைமுடி அனைத்தையும் வெட்டிவிட்டு ஒட்டு மீசையை வைத்து விட்டு, நாளை இவனை ஷூட்டிங் இருக்கு வர சொல் என உதவியாளரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாசர் அவர்களுக்கு இயக்குனர் பரதன் செய்தது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்திருக்கிறது. எனினும் அவருடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து தான் மகிழ்ந்ததாகவும் என்ற பொழுதிலும் அவர் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது மன வருத்தம் அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் அடுத்த நாள் ஷூட்டிங் இருக்கு ரெடியாகி சென்ற பொழுது இயக்குனர் பாரதன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசி விட மாட்டாரா என நினைத்த நாசர் அவர்கள் அவரிடம் சென்று இந்த திரைப்படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரிந்து கொள்ளலாமா? என கேட்க, ” மாடோடு மாடாக இரு ” என கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின், தானும் சென்று இரண்டு காளை மாடுகளுடன் நின்று பார்ப்பது முறைப்பது போன்றவற்றை செய்து கொண்டே இருந்ததாகவும் நடிகர் நாசர் அவர்கள் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.