தெலுங்கானாவில் திணிக்கப்படும் தெலுங்கு மொழி!! விசித்திரமாக போராட்டம் நடத்திய பெற்றோர்!!

0
14
Telugu language being imposed in Telangana!! Parents protested in a strange way!!
Telugu language being imposed in Telangana!! Parents protested in a strange way!!

மத்திய அரசிற்கும் ஒரு சில மாநில அரசுக்கும் இடையே இப்பொழுது மொழிப்போர் ஆனது சென்று கொண்டிருக்க கூடிய சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒருபுறம் மொழிக் கொள்கை திணிப்பு தொடர்கிறது. மறுபுறம் தாய் மொழியில் பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது போன்ற ஒரு சூழல்தான் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசினுடைய இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களுடைய கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும் என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பு மொழியை கற்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றும் கல்வி மற்றும் தொழில் எதிர்காலத்திற்கு தேவையற்ற மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டும் என கூறுவது எந்த விதத்திலும் முறை அல்ல என்றும் தெரிவிக்கின்றனர். தெலுங்கானாவில் இருக்கக்கூடிய பலர் வேலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தவர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேச தெரியாதவர்கள் தான் அதிக அளவில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவில் இருக்கக்கூடிய மாணவர்கள் மட்டும் அல்லாத இந்தியாவில் இருக்கக்கூடிய மொத்த மாணவர்களும் அவர்களுடைய தேவை விருப்பம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இரண்டாவது மொழியை தேர்வு செய்கின்றனர் என்றும் இதற்கு தெலுங்கானா அரசனது அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு தெலுங்கு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்றால் அதனை மூன்றாவது மொழியாக அறிவிக்கலாம் என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleசினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த ” புஷ்பா புருஷன் ” நடிகை ரேஷ்மா!! இப்படி ஒரு காரணமா!!
Next articleகுறைந்த தவணை முறையில் வீடு வழங்கும் திட்டம்!! அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு!!