தெலுங்கு மொழியில் ரிமேக்! ஓ மை கடவுளே போஸ்டர் வெளியீடு

Photo of author

By Parthipan K

‘ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது.

தெலுங்கில் நடிகர் விஸ்வக் மற்றும் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்
தமிழில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.