ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??
ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி
ரூபாய் 24,738 கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுர்ந்தரராஜன் அவர்களின் உரையோடு தொடங்கிய பேரவை கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தின் விவாசயிகளுக்கு நான்கு தவணையாக கடன்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் ரூபாய் 25,000 நிலுவை வைத்திருக்கும் 5.83 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இதற்காக அம்மாநில அரசு ரூபாய் 1198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இலவச வீட்டுமனை பட்ட வழங்கல், விவசாய கடன் ரத்து போன்ற இன்ப அதிர்ச்சியை தரும் அறிவிப்புகளை அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் புதிய அறிவிப்பு ஏதாவது வருமா? என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததால் அவருக்கு தமிழக விவசாயிகள் சார்பில் காவிரி காப்பாளன் என்கிற பட்டம் அளித்தது குறிப்பிடத்தக்கது.