தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Parthipan K

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. இது வரை மட்டும் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தாபால்களின் மூலமாகவே  பொதுமக்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற  ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் இனி பொதுமக்களின் வீடுகளுக்கே வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதசுவாமி கோவில் பிரசாதம் தாபால் மூலமாக இனி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதேபோன்று கோவிலில் உள்ள தீர்த்தமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதன்படி ராமநாதசுவாமி மற்றும் பட்மதர்ஷினி அம்பாள் புகைப்படம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இவற்றுடன் 50 கிராம் கற்கண்டு ,விபூதி மற்றும் குங்குமம் அனைத்தும் அறநிலையத்துறை சார்பில்  வழங்கப்பட இருக்கின்றது.

இவை அனைத்தும் தாபல் மூலமாக பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை  சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் பிராசம் பெற விரும்பும் பக்தர்கள்  இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட www.hrce.tn.gov.in  இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பதிவு கட்டணம் 145 செல்லுத்த வேண்டும்.

இதன் மூலம் பிரசாதங்கள் தாபால் மூலமாக பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.