சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஜிகாசே பகுதியில் உள்ள டிங்கிரியில் நேற்று காலையில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.8 அளவுக்கு இருந்துள்ளதாக சீனா பேரழிவு மீட்பு துறை கூறியுள்ளது. இது ஒரு கடுமையான நிலநடுக்கம் தான்.
சீனாவின் இந்த டிங்கிரி பகுதியானது இந்தியாவின் எல்லை அருகாமையில் அமைந்துள்ளது. இந்து ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. இந்த இடத்தை பொறுத்த வரை புத்த மதத்தின் தலாய்லாமா க்கு அடுத்து உள்ள பஞ்சமன் லாமா உடைய பாரம்பரிய இடம் தான் இந்த திபெத் பகுதியின் டிங்கிரி.
இந்த டிங்கிரி பகுதியில் கிட்டத்தட்ட 10 கி மீ ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வாகனங்கள் செல்லும் சாலை பிளந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 188 பேர் காயமடைந்துள்ளனர் என்று சீன அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.