மும்பை தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து- 25 வீடுகள் முற்றிலும் சேதம்
மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள், எட்டு தண்ணீர் டேங்கர்கள், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால், யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.