சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சி உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதி சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் சேகர் (34). இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும்  கடை நடத்தி  வருகிறார்.  மேலும் நேற்று முன்தினம்  இரவு வழக்கம் போல் சேகர் மர கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் அதனைக் கண்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ அணைப்பு  வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். மேலும்   தீயணைப்பு வீரர்கள் தந்திரமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தால் மரக்கடையில் இருந்த மர சாமான்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்தில்  சேதமான பொருட்களின் சராசரி மதிப்பு 5 லட்சம் இருக்கும் எனவும் கடை உரிமையாளர் கூறினார். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணைநடத்தினார்கள் அந்த  விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Leave a Comment