கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த ஜெர்மனியின் மக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் திடீரென புகுந்த பிஎம்டபிள்யூ கார் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்கள் மீது மோதிக்கொண்டே சென்றது. இதனை சற்றும் எதிர்பாராமல் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 70க்கும் ஏற்பட்ட மக்கள் இதில் காயமடைந்தனர்.
ஒரு குழந்தையை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமாக பலத்த காயமடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. திட்டமிட்டு வேண்டுமென்றே பிஎம்டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்து வந்து இந்த தாக்குதலை நடத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது மருத்துவர் தலேப்பை உடனடியாக ஜெர்மன் போலீசார் கைது செய்தனர்.
எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது? கிறிஸ்துமஸ் நெருங்கும் வேளையில் கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் ? என்று மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், இது தனி ஒரு நபரின் வெறியாட்டம் என்பது தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த தலேப், இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர் என்பதும் அவர் ஒரு நாத்திகவாதி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல… இவர் சவுதி அரேபியாவில் தீவிரவாதம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வது போன்ற குற்றச் செயல்களில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் அவரை சவுதி அரேபியாவிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக கடந்த 2006 ஆம் ஆண்டு அடைக்கலம் கொடுத்திருக்கிறது, ஜெர்மனி.
இன்று தனக்கு அடைக்கலம் கொடுத்த தேசத்திலேயே தனது வெறியாட்டத்தை அரங்கேற்றி அப்பாவி மக்கள் பலியாக காரணமாகி இருக்கிறார், தலேப்.
அதுமட்டுமின்றி ஜெர்மனிக்குள் நுழைந்ததும்
சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற உதவுவதற்கு தனியாக இணையதள பக்கம் ஒன்றையும் அவர் உருவாக்கி, அதில் தீவிரமாக இருந்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் சந்தையை குறி வைத்து அவர் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் தெரியவில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியுடன் புகுந்த இஸ்லாமிய தீவிரவாதி, 13 பேரை கொன்ற நிலையில், தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அதே போன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் கலை கட்டிய ஜெர்மனியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.