கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

0
167
#image_title

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்.

ஜம்மு கஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த டிரக் வாகனம் நேற்று மதியம் மூன்று மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே டிரக் தீப்பிடித்து எறிந்ததற்கு காரணம் எனவும் அவர்கள் கையெறி குண்டுகளை வீசி இருக்கலாம் என ராணுவத்தின் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் துணை அமைப்பான PAFF அமைப்பு பொறுப்பேற்றுள்ள போதிலும் இதனை உறுதிப்படுத்த இராணுவத்தின் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அடையாளம் தெரியாத குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையை ராணுவம் பல்வேறு அமைப்புகளின் மூலமாக தீவிரப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சம்பவம் நடைபெற்ற இடத்தில் டுரோன்களை கொண்டு கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ள நிலையில் மோப்ப நாய்கள் வெடிகுண்டுகள் செயலிழப்பு படை போன்றவற்றை கொண்டு அந்த இடத்தில் விசாரணையும் கண்காணிப்பையும் தீவிர படுத்தியுள்ளனர்.

Previous articleஅதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!
Next articleஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்!