ரசிகர்களின் ஆசைக்காக தியேட்டரில் வெளியான தல அஜித்தின் வலிமை!! வைரலாகும் மாஸ் வீடியோ!!

Photo of author

By Jayachithra

ரசிகர்களின் ஆசைக்காக தியேட்டரில் வெளியான தல அஜித்தின் வலிமை!! வைரலாகும் மாஸ் வீடியோ!!

கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் ஆவார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது.

மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு மீண்டும் ஹைதராபாத்தில் மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் எந்த விதமான ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறிது நாட்களுக்கு முன் தான் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அத்துடன் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் பெரிய திரையில் அஜித்தை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவே இல்லை.

தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஐந்து நாட்களில் படப்பிடிப்பு முடிந்தபின் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன், புதிய போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை வேலூரில் உள்ள விஷ்ணு சினிமா திரையரங்கில் திரையிட்டு உள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தினால் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்கள் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டு உள்ளது.