தல அஜித் குமார் என்று கூறினால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார்.
முதன் முதலாக மெக்கானிக்காக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த தல அஜித். தற்போது உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நட்சத்திர நடிகராக மாறி இருப்பது அவருடைய உழைப்பினால் மட்டுமே. அதிலும் தமிழக தல ரசிகர்கள் தலையின் மீது வெறித்தனமான அன்பை கொண்டிருக்கின்றனர்.
அவர்களது அன்பு தல அஜித்தின் ஒவ்வொரு படத்தின் அப்டேட்களின் போதும் வெளிவரும். படத்தின் ரிலீசை போலவே ஒவ்வொரு படத்தின் டீச்சர்கள் மற்றும் போஸ்டர்கள் பாடல்கள் ஆகியவற்றையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் மிகுந்த சோதனையை கொடுத்தது.
https://twitter.com/ajithFC/status/1453193368423436293?t=xAm4RyHwqtTCaIkmDyhKlw&s=19
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தின் வெற்றி எதிர்பாராத அளவில் இருந்தது எனவே மீண்டும் அஜித் இவர்களுடன் சேர்ந்து படம் செய்ய எத்தனித்தார்.
இந்த மூவர் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் முதலமைச்சர் முதல் முடி வரை சென்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படத்தின் அப்டேட்டுகள் சமீபத்தில்தான் வெளியாகத் துவங்கின. பட வேலைகளை முடித்துவிட்டு அஜித் தற்போது பைக்கில் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார். சமீபத்தில் வாகா எல்லையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது உயரமான பாறையின் விளிம்பில் நின்றவாறு தல அஜித் பயம் என்று வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது அவருக்கு பயம் இல்லாத விஷயமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பார்க்கும்போது பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது.