அடேங்கப்பா! நம்ம தளபதி மகன் என்னமா கார் ஓட்றாரு! வீடியோ உள்ளே! மறக்காம பாருங்க!

Photo of author

By Kowsalya

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இளைய தளபதிக்கு தான் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கையசைத்தால் அந்தக் கையின் அசைவுக்கு ஆட்டம் போடும் எத்தனையோ இளம் தலைமுறைகள் இவரைப் பின்பற்றி வருகிறார்கள். இவர் படங்களின் தகவல்கள் இப்போ வந்து விடும். ஆனால் இவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் அவ்வளவு எளிதாக வருவதில்லை.

தளபதிக்கு மகன் மகள் உள்ளனர். மற்ற திரைப்பட நடிகர்கள் தங்களது குடும்பப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் நம் தளபதி இடமும் அந்த பழக்கம் கிடையாது. அதாவது நம் தளபதியின் மகன் மகள் மற்றும் மனைவி புகைப்படங்கள் எதுவும் அவ்வளவு சீக்கிரம் வெளி வராது. தளபதியின் மகன் ஜேன்சன் சஞ்சய் கனடாவிலுள்ள சினிமா படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

இவர் எப்பொழுது சினிமா பக்கம் வருவார் என்பதை பற்றி தெரியவில்லை. சீக்கிரம் திரையில் பார்ப்போம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர் திரைக்கு முன்னால் வருவதைவிட பின்னால் வருவதை விரும்புகிறாராம்.

இப்பொழுது அவர் கார் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஜேன்சன் தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்யும் போது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அப்படியே தன் அப்பாவை போலவே காணப்படுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் ஊரடங்கு தம்பி மாஸ்க் போடுங்க என்ற கமெண்டுகளும் தெறித்து வருகிறது.

 

 

https://twitter.com/IamJasonSanjay/status/1400063355650416647?s=20