தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

Photo of author

By Sakthi

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

Sakthi

Updated on:

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

 

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

 

லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்னார் லியோ திரைப்படத்தின் முதல் பாடல் நான் ரெடி என்ற பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வரும் நிலையில் தளபதி68 படம் பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

 

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் அவரது 68வது திரைப்படமான தளபதி68 படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். தளபதி68 படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் தளபதி68 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

 

இந்த நிலையில் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்பது தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது. தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் வெளியான பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லது லியோ திரைப்படம் வெளியான பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்து பின்னர் தளபதி68 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.