சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!

0
62

சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!

 

மனித கழிவுகளில் ஒன்றான சிறுநீரை மறு சுழற்சி செய்வது தொடர்பாக செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றது. அதில் பல சோதனைகள் வெற்றிகரமாக முடிகின்றது. சில சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுநீரை மறுசுழற்சி செய்யும் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

 

அதாவது விண்வெளிக்கு பயணம் செய்யும் பொழுது விண்வெளி வீரர்கள் தண்ணீர் கொண்டு செல்வது சாத்தியமில்லாத நடக்காத ஒன்று. அந்த சமயம் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் தங்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை மறு சுழற்சி செய்து தண்ணீராக பயன்படுத்துகிறார்கள். அந்த சமயம் செய்யும் மறு சுழற்சியில் தண்ணீர் திறம்பட கிடைக்காது. எனவே நாசா நிர்வாகம் சிறூநீரை மறு சுழற்சி செய்யும் சோதனையில் ஈடுபட்டு வந்தது.

 

இதையடுத்து 98 சதவீதம் சிறுநீர் மற்றும் திரவங்களை மறு சுழற்சி செய்து குடிநீராக்க மாற்ற முடியும் என்ற சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக நாசா  கூறியுள்ளது. மேலும் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் சுவாசத்தையும் மறுசுழற்சி செய்யும் சோதனையும் நடைபெற்று வருவதாக நாசா அறிவித்துள்ளது.