இன்று வெளியாகும் தளபதி68 பூஜை வீடியோ!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
49
#image_title

இன்று வெளியாகும் தளபதி68 பூஜை வீடியோ!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று(அக்டோபர்24) மதியம் வெளியாகும் என்று நேற்று(அக்டோபர்23) மாலை தளபதி68 படக்குழு பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகியது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது. லியோ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் 68வது திரைப்படம் ஆகும். எனவே தற்காலிகமாக படக்குழு தளபதி68 என்று பெயர் வைத்துள்ளது.

தளபதி68 திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, தெலுங்கு நடிகை மீனாட்சி சௌத்ரி, ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் மைக் மோகன் அவர்கள் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் எஸ்ஜே சூரியா அவர்களும் தளபதி68 திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

தளபதி68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. தற்பொழுது தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களிடம் ரசிகர்கள் தளபதி68 திரைப்படம் பற்றிய அப்டேட் கேட்டதற்கு அனைத்தும் லியோ திரைப்படம் வெளியீட்டுக்கு பின்னர் தான் என்று அறிவித்திருந்தார். அதன்படி லியோ திரைப்படம் வெளியான பின்னர் முதல் அப்டேட்டாக நடிகர் விஜய் நடிக்கும் தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று(அக்டோபர்23) மாலை வெளியிட்டது.

அதன்படி படக்குழு வெளியிட்ட அறிவிப்பில் நாங்கள் சத்தியம் செய்தபடி தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ விஜயதசமி நாளன்று(அக்டோபர்24) மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதால் இருந்து நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் லியோ வேனில் இருந்து தளபதி68 வைபிற்குள் சென்றுள்ளனர்.