Thali kayiru benefits in tamil: தாலிக்கயிறு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு பயன்களா?

Photo of author

By Pavithra

Thali kayiru benefits in tamil: தாலிக்கயிறு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு பயன்களா?

Pavithra

Updated on:

thali kayiru benefits in tamil : முப்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை குறைக்கும் விதமாகவே மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து கட்டும் முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்டது.

தினமும் பெண்கள் குளிக்கும்போது மாங்கல்யத்திற்கு கட்டாயம் மஞ்சள் தடவிக் குளிக்க வேண்டும். அதுதான் மங்களகரமானது குடும்பத்திற்கும் நல்லது எனப் பெரியோர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு உண்மையான காரணம் இயற்கையிலேயே மஞ்சள் மிக அதிகமான மருத்துவ குணத்தை உடையது. எப்போதும் மஞ்சள் தடவிய மாங்கல்ய கயிறு பெண்களின் மார்பகங்களில் உரசும்படி இருக்கும். இந்த மஞ்சள் புற்றுநோயை பெருமளவில் கட்டுப்படுத்த உதவும்.

ஆனால் தங்கத் தாலிக்கொடி மஞ்சள் கயிற்றை போல மஞ்சளை தக்கவைத்துக்கொள்வது இல்லை. ஆடம்பரத்திற்காக தங்கச்சங்கிலியை அணிவதற்கு பதில் வேறு ஆபரணங்களை செய்துக்கொண்டு தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவதே பெண்களுக்கும் அவர்களின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.