ரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழருவி மணியன் கொடுத்த துருப்பு!

Photo of author

By Sakthi

ரஜினிகாந்தின் அரசியல் வருகை சம்பந்தமாக தமிழரின் கருத்து தெரிவித்திருக்கின்றார் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு இந்த ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார் அதன் பின்பு உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக மாறி இருக்கின்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தான் என்ன முடிவு செய்தாலும் ஆதரவாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தார்கள் என்றும் தன்னுடைய முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் ரஜினியை தொடர்ச்சியாக அரசியலுக்கு வருமாறு தமிழருவி மணியன் இன்று நேரில் சந்தித்து பேசி இருக்கின்றார் அவரின் உடல் நலம் அரசியல் தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன் உங்களுடைய உடல் நிலைதான் மிகவும் அவசியம் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அரசியலுக்கு வருவது பற்றி சிந்தியுங்கள் என்றும் ரஜினியிடம் தெரிவித்ததாக கூறியிருக்கின்றார்.

தமிழக மக்களிடம் எதையும் மறைத்து வாழ்ந்துவிட வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது என்று தெரிவித்த அவர் மக்கள் நலனுக்காக அவர் நினைப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார் அதேபோல தன்னுடைய உடலில் இருக்கின்ற பிரச்சனை சம்பந்தமாகவும் வெளிப்படுத்தி இருக்கின்றார் ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.