சிறுவண்டிடம் சிக்கித்தவிக்கும் திமுக சீனியர்கள்! ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

0
53

திமுகவில் இருக்கும் மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன்பாக கை கட்டி வைப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்து இருக்கின்றார்

சாட்சி விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளின் குடிநீர் திட்டத்திற்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டு வரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரம்பித்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி ஆற்றில் செயல்பட்டு வருகின்றது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்தான் திமுகவில் மட்டுமே நேரடியாக பதவிக்கு வருகின்றார்கள் சிவகாசியில் தம்மை எதிர்த்து நின்றாலும் அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்று அவர் தெரிவித்திருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின் சீனியர் தலைவர்கள் பலரை அவர் மதிப்பில்லை என்பதும் கட்சி தொண்டர்கள் பலர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.