தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

0
183
தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !
தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர் சிவகுமார் திருப்பூர் ரயில் நிலையத்தில் மின் துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்

கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பணியாளர்களும் சென்னை பெரம்பூர் வந்தனர். மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த சிவக்குமார் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் அவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்தவுடன் சிவகுமாரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் ரயில்வே காவல்துறை காவலர்கள் உடனடியாக கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleசூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!
Next articleபா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்