அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

காலத்தால் அழியாத தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தங்கர்பச்சான் தனது எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக இயக்கி வந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் பல சோதனைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான் திரைக்கு வந்தது. பல்வேறு தரப்பினரும் பாராட்டும் விதமாக படத்தை எடுத்திருந்தாலும் தாமதமாக வந்த காரணத்தால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்க தொடங்கியுள்ளார் தங்கர் பச்சான். அவர் இயக்கி வரும் இந்தப் புதிய படத்தில் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.

விஜித் பச்சான், பிரபுதேவாவிடம் இரண்டு வருடங்கள் நடனப் பயிற்சியும்  பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் சண்டை பயிற்சியும் கற்றுள்ளாராம்.

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இது குறித்து பேசிய தங்கர் பச்சான் படம் இந்த தலைமுறைக்கு பிடிக்கும் விதமாக இருக்கும். காதல், சண்டை, காமெடி, பொழுதுப்போக்கு என எல்லாம் கலந்த அம்சமாக இருக்கும் என கூறியுள்ளார்.

சென்னையில் நடத்தவுள்ள இதன் படப்பிடிப்பை சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விஜித் பச்சானைப் பார்த்த அனைவரும் தங்கர் பச்சானுக்கு இவ்வளவு பெரிய பையனா என வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்களாம்.தந்தையை போல மகனும் திரைத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Leave a Comment