உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

0
287
Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!
Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலித் அரசியல் குறித்து தெரியாமல் தான் காலா, கபாலி போன்ற படங்களில் நடித்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். 

அடுத்ததாக இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்தால், சும்மா சிரிச்சதுக்கே இப்படியா? நம்ம சிரிப்புக்கு அவ்வளவு பவர் என்று கூறி ஏற்கனவே கோபமாக இருந்த ரஜினி ரசிகர்களை மேலும் கோபமடைய செய்தார். இந்நிலையில் ரஞ்சித்தின் இந்த செயலுக்கு இயக்குனர் மோகன் ஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழில் திரெளபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசூரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “என்னை இயக்குனராக அறிமுகப்படுத்திய ரிச்சர்ட் ரிஷிக்கே நான் இன்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எந்த மேடை ஏறினாலும் அவருக்கு நன்றி சொல்ல மறந்ததே கிடையாது. 

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து உங்களை எந்த இடத்தில் வைத்துள்ளார். அவரை போய் நீங்கள் நக்கல் செய்து சிரிக்கலாமா? கொஞ்சமாவது நன்றி உணர்வு இருக்கா ரஞ்சித் உங்களுக்கு? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ரஜினியை பிடிக்காத ஆளே கிடையாது. அவரை கிண்டல் செய்து என்ன சாதிக்க போறீங்க” என காட்டமாக பேசியுள்ளார்.

Previous articleதீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??
Next articleமீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??