அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…

Photo of author

By Sakthi

 

அர்ஷ்தீப் மற்றும் பிரண்டனுக்கு நன்றி… நிக்கோலஸ் பூரண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்…

 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரண் அவர்கள் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நேற்று(ஆகஸ்ட் 13) இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது.

 

பின்னர் 166 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது.

 

இந்த போட்டியின் பொழுது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரண் அவர்கள் புகைப்படமாக இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

நிக்கோலஸ் பூரண் அவர்கள் பகிர்ந்த புகைப்படத்தில் வயிற்றிலும் கையிலும் காயம் உள்ளது. மேலும் நிக்கோலஸ் பூரண் அவர்கள் அந்த பதிவில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அவர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் பிரண்டன் கிங் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

நேற்று(ஆகஸ்ட்13) நடைபெற்ற போட்டியில் பிரண்டன் கிங் பேட்டிங் செய்த பொழுதும் அர்ஷ்தீப் சிங் பந்து வீசிய பொழுதும் நிக்கோலஸ் பூரண் அவர்களுக்கு இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து நிக்கோலஸ் பூரண் பதிவு செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.