நன்றியை மறந்த எடப்பாடி! மீண்டும் சசிகலாவை தேடி வரும் அதிமுக!
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா முதலில் பரப்புரையில் மக்களை சந்திப்பதாக கூறினார்.அதன்பின் திடீரென்று நான் தேர்தலில் இருந்து விலகப்போவதாக கூறினார்.அதனையடுத்து தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை மேற்கொண்டார்.ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்துக்கொண்டார்.
அதே போல கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவணநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்டார்.அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.அதனையடுத்து அவர் அம்மாவின் வேதா வீடைபோலவே அதன் அருகாமையிலே ஒரு வீட்டை கட்டி வருகிறார்.தேர்தல் முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டும் என்பதில் மிகவும் மும்மரமாக உள்ளார்.
அதனையடுத்து சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற அம்முக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மிக விரைவில் சசிகலாவை சந்திக்க அதிமுக வரும் என்று கூறினார்.அது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.அனைவரும் ஒருங்கிணைந்து தீய சக்தியை எதிர்க்க வேண்டும் என்பது தான் சசிகலாவின் ஆசை.இதனை சிறிதளவும் கூட புரிந்துக்கொள்ளாத மனநிலமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.ஒரு மனிதனுக்கு நன்றி முக்கியம் என்பதை கூட மறந்த்துவிட்டு இன்றைக்கு துரோகத்தின் உச்சிக்கு சென்று எல்லாம் நான் என்று கூருகிறார்.
அதற்குரிய பதிலை வாக்காள பெருமக்கள் கொடுப்பார்கள் என சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.ஆர்.கே.நகரில் குக்கருக்கு எப்படி வரவேற்பு இருந்ததோ அதே போன்று இன்று தமிழகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.குக்கருக்கு தன் தாங்களின் வாக்கு என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.டிடிவி தினகரனுக்கு கோவில்பட்டி மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர் என்றுக் கூறினார்.அதிமுக மீண்டும் சசிகலாவை தேடி வரும் என்று தெரிவித்தார்.
மிகப்பெரிய பொறுப்பில் சசிகலா வருவர் என்றார்.கோவில்பட்டி தொகுதியில் செய்த நலத்திட்டங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த திட்டங்கள்,அமைச்சர் செய்த திட்டங்கள் கிடையாது என தீர்ப்பு வந்ததும் சசிகலா கிளம்பி சென்றிருந்தால் இந்த ஆட்சி வந்திருக்காது.இவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்,விசுவாசம் எங்கே போய்விட்டது.ஏன் நன்றி மறந்தீர்கள்.ஏன் துரோகம் செய்தீர்கள்.நான்கு ஆண்டுகாலமாக தமிழகத்திற்கு அதிக கடனை ஏற்றிவிட்டது தான் மிச்சம் என்று அவர் தெரவித்தார்.