பாதி படத்திற்கே இவ்வளவா?? அப்படியென்றால் முழு படத்திற்கு கஜானாவே காலி ஆகிடும் போல??

0
123
That much for half the film?? So the coffers will be empty for the entire film??
That much for half the film?? So the coffers will be empty for the entire film??

பாதி படத்திற்கே இவ்வளவா?? அப்படியென்றால் முழு படத்திற்கு கஜானாவே காலி ஆகிடும் போல??

சினிமாத்துறையில் இருக்கின்ற பிரபலமான நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் படங்கள் அதிக அளவில் வெற்றி வாகையை சூடியுள்ளது.

அந்த வகையில், தற்போது இவரின் அடுத்த படமான கங்குவா, 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இதில் சூர்யா வித்தியாசமான உருவத்தில் ஐந்து வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் ஜூலை 23 ஆம் தேதியான சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியானது. இது வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இதனால் இப்படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கிறது.

ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது கங்குவா படத்தை இயக்குனரின் சிறுத்தை சிவா இப்படத்திற்கு இருநூறு கோடி மட்டுமே பட்ஜெட் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருந்த நிலையில்,

தற்போது பாதி படத்திற்கான ஷூட்டிங் மட்டுமே முடிவடைந்திருக்கிறது. ஆனால் இதற்கே பட்ஜெட் 250 கோடியை தாண்டி உள்ளது. எனவே, முழு படத்தையும் எடுப்பதற்கு மொத்தம் 300 கோடியை தாண்டி பட்ஜெட் செல்லும்.

இவ்வாறு சொன்னதை விட அதிக பட்ஜெட்டில் படம் உருவாகுவதால் தயாரிப்பாளர் மிகவும் வேதனையில் இருக்கிறார். எனவே, படம் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் அனைவரும் வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று மொத்தம் பத்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளிவர இருப்பதால் கண்டிப்பாக இப்படம் பெரும் லாபத்தை ஈட்டி தரும் என்று கூறப்படுகிறது.

Previous articleதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 500 கோடி ரூபாய் சாதனை!! வாயை பிளந்த ரகிகர்கள்!!
Next articleவிநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று வெளியாகிறது பிரபல நடிகர் படம்!!