இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முதல் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கியது.
அனுபவம் மிக்க ஸ்பின்னரான அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. மேலும் இவர் நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனுபவம் மிக்க வீரர் அஸ்வின் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார். இரண்டாவது போட்டியில் வலைப்பயிற்சியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அஸ்வினுக்கு வலைப்பயிற்சியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு பிறகு ஓய்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த தொடரில் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் என கூறப்பட்டு வருகிறது. இந்த முறை போட்டியில் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்க உள்ளது. 2 ஸ்பின்னர் என்றால் ஜடேஜா உடன் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.