3 ம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது ஆனால் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.
இந்நிலையில் இந்திய அணி இலங்கை தொடரில் தோல்வி அடைந்தது மற்றும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் தோல்வி இது போன்ற தோல்விகள் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது பல வகையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அவருக்கு கடைசி வாய்ப்பாக இந்த ஆஸ்திரேலியா தொடரை வெல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
41 வருடத்திற்கு பின் ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் 4 முறை டெஸ்ட் போட்டியில் தோல்வி. இலங்கை அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பின் ODI தொடர் இழந்தது. 45 வருடத்தில் ஒயர் ODI தொடரில் கூட இந்திய அணி வெல்லாதது 2024 ல் தான். சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி.
24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒயிட் வாஷ் தோல்வி .10 வருடத்திற்கு பின் ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வி. ஒரு ஆசிய அணியில் டெஸ்டில் இதுவரை குறைவான ரன் பதிவு செய்த அணி இந்திய அணி 46 ரன்களில் சுருண்டது. இவ்வாறு செய்த மோசமான சாதனைகளால் கம்பீர் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.