சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர்.
அதில் மாநாடு முடிந்து வீடு திரும்பும் போது 6 பேர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதில் சென்னையில் வசிக்கும் வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் மற்றும் திருச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் திருவண்ணாமாலை சேர்ந்த 1 என 6 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பிடு வழங்கினர். மேலும் இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலை பொறுத்து ஒரு சிலர்க்கு அதிக நிதியும், மற்றும் அவர்களின் குழந்தைகள் படிப்பு செலவுகளை தவெக கழகம் ஏற்றுக்கொள்ளுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரை இருந்தது. விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு ஆதரவு என பல விமர்சனங்கள் அரசியல் கட்சி தலைவர்களால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் டிசம்பர்-27 விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.